அமைச்சை அச்சுறுத்தும் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்…!

நுவரெலியா – அக்கரப்பத்தனை ஊட்வெல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

சுமார் 300ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊட்வெல் – பெங்கட்டன் பெருந்தோட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு ஊடாக 71 தனிவீடுகள் அமைக்கப்பட்டு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 84 குடும்பங்களுக்கு தனிவீடுகள் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

மேலதிக வீடுகளை அமைக்க தோட்டத்தில் தேயிலை காணிகளை பெற்றுகொள்ள தயக்கம் காட்டப்பட்டுள்ளது.

இதனால், புதிய வீடுகளை பெற்று சென்ற குடும்பங்கள் வசித்த லயன் அறைகளை உடைத்து அவ்விடத்தில் புதிய வீடுகளை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், குறித்த தொடர் லயன் குடியிருப்பில் வாழும் மக்கள் அதிலிருந்து வெளியேற தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.

இவர்களை இந்த வீடுகளில் இருந்து அகற்றி அவர்களுக்கு வழங்கியுள்ள புதிய வீடுகளுக்கு செல்ல அழுத்தம் கொடுத்துள்ள தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.