அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் தான் தீர்ப்பு வழங்குவேன்: விமலின் மகள்..!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் சபதம் எடுத்துள்ளார்.

அம்மா, அப்பாவுக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டமையினால் தான் சட்டப் பிரிவில் கல்வியை தொடர்ந்து நீதிபதியாக வரவுள்ளதாக வீரவன்சவின் மகள் விமாஷா விஷ்வாதரி தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெற்றமை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாடசாலையில் இடம்பெற்ற இறுதி பரீட்சையில் தான் வகுப்பின் இறுதி மாணவியாக வந்ததாகவும், எனினும் சாதாரண தர பரீட்சையில் சிறப்பான சித்தியை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் வைத்தியராக வேண்டும் என கனவு இருந்தது. எனினும் பெற்றோருக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டமையினால் நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணமே தற்போது உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பரீட்சையில் சித்தியடைந்தால் நாய் குட்டி ஒன்றை தந்தையிடம் கேட்டதாகவும், தந்தை தனக்கு கிட்டார் ஒன்றை சேர்த்து பரிசளித்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.