அரபிக் கல்லூரி மாணவன் மீது தாக்குதல் நடத்த காரணம் என்ன..?

திருகோணமலை மூதூர் ஜின்னா நகர் ‘பஜதுல் உலூம் அரபிக் கல்லூரியில்’ கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது அதிபரும், அக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் மௌலவி ஒருவரும் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாக படுகாயமடைந்த நிலையில் மாணவர் ஒருவர் கிண்ணியா தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மூதூர் காவற்துறையினர் நேற்று (30) திங்கட்கிழமை மாலை கிண்ணியா மருத்துவமனையில் நேரில் வருகை தந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்து கிண்ணியா தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் கிண்ணியா பெரியாற்று முனை பகுதியைச் சேர்ந்த அமீன் – முகம்மது பாசீத் (வயது – 16) என்பவராவர்.

இது பற்றி, மேலும் தெரியவருவதாவது இந்த மாணவரை அதிபர் கூப்பிட்டு கன்னத்தில் அரைந்ததாகவும் இதன் போது மௌலவி ஒருவர் பனை மட்டையால் தாக்கியதாகவும் , இச் சந்தர்ப்பத்தில் மாணவர் கீழே விழுந்தவுடன் அம் மாணவர் மீது ஏறி மிதித்து தாக்கியதாகவும் இம் மாணவனின் பெற்றோர்கள் காவற்துறையிடம் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் விசாரணையை மேற்கொண்ட மூதூர் காவற்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவனை பார்வையிட்டனர்.

இம் மாணவனில் உடம்பில் 29 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தாக்குதல் எதற்காக இடம் பெற்றது என்பது காவற்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.