அவுஸ்திரேலியாவில் தவிக்கும் குடும்பம்..!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் நாடுகடத்தல் உத்தரவு பிற்போடப்பட்டுள்ளமையானது, அந்த குடும்பத்தை பதற்றத்தில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஏதிலி செயற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலிய சென்ற, 2013ம் ஆண்டுக்குப் பின்னர் மத்திய குயின்ஸ்லாந்தின் பிலோயிலா பகுதியில் குடியேறினர்.

அவர்களது வீசா காலம் நிறைவடைந்தப் பின்னர் அதிகாரிகள் அவர்களை நாடுகடத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டனர்.

எனினும் அவர்கள் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான சட்டரீதியான ஏதுநிலைகள் இருப்பதாக தெரிவித்து, மெல்போர்ன் பிராந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களை நாடுகடத்த முடியுமா முடியாதா? என்பது தொடர்பான உத்தரவு நேற்று முன்தினம் அறிவிக்கப்படவிருந்த போதும், அன்றையதினம் தீர்ப்பு வெளியாக்கப்படாமல், திகதி பிற்போடப்பட்டது.

இதனை அடுத்து குறித்த குடும்பம் செய்வதறியா நிலையில் இருப்பதாக ஏதிலிகள் செயற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.