இந்தக் கொலையுடன் அவர் தொடர்பு: பொலிஸார் அதிரடி நடவடிக்கை…!

யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பன் – குடத்தனை பகுதியில் தனிமையில் வசித்து வந்த மகள் சடலமாகவும், தாயார் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்த நிலையில் கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்த கொடூரச் செயலை செய்திருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர் உயிரிழந்தவர்களின் வீட்டில் உள்ள பனை மரத்தில் சீவல் தொழில் செய்பவர் என்றும் இவர் காலையில் தொழிலுக்குச் சென்ற சமயம் இச்சம்பவத்தை அயலாருக்கு அறிவித்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

எனினும் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் மோப்பநாயின் உதவியுடனேயே கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நல்லதம்பி – ரேவதி (57 வயது) என்ற திருமணம் செய்யாத பெண் உயிரிழந்துடன், அவரது தாயார் நல்லதம்பி – இராசம்மா (வயது 75) பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு விரோதிகள் என்று யாரும் இல்லாத நிலையில், மரணமடைந்தவரின் உடலில் வெளிக்காயங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.