இப்படி எல்லாம் மாற்றம் வரப்போகுதா..?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட திருப்புமுனையை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிகளில் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் முதற்கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் கபீர் ஹாஷிம் விலகினார்.

இந்த வெற்றிடத்திற்கு அக்கட்சியின் இளம் உறுப்பினரும், கல்வியமைச்சருமான அக்கிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த அக்கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.

இதற்கமைய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிலியிருந்து விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விரைவில் விலகவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இளம் உறுப்பினருக்குப் பதிலாக மூத்த அமைச்சர் ஒருவரை நியமிக்கவும் ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.