இருவரின் உயிரை காவு கொண்ட கோர விபத்து…!

மினுவங்கொடை நிட்டம்புவ பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டியொன்று பேரூந்தொன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மினுவங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 47 மற்றும் 58 வயதுடைய இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.