இலங்கை வந்த பிரித்தானியர்களுக்கு நடந்த நிலை..!

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பிரித்தானிய பயணிகள் அதிர்ச்சி சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்ததாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்களே இவ்வாறான சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுப் வண்டி ஒன்றில் யால தேசிய பூங்காவிற்கு சென்ற பிரித்தானிய பயணிகளை மிரட்டி யானை ஒன்று உணவு கேட்டுள்ளது.

வண்டியில் இருந்து வந்த உணவு வாசத்தினால் வாகனத்திற்குள் தும்பிக்கையை நுழைத்து யானை உணவு தேட ஆரம்பித்துள்ளது.

பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லண்டனை சேர்ந்த Bianca என்ற 28, பெண் தனது இரண்டு பிரித்தானிய நண்பர்களான 28 வயதுடைய Argentinian மற்றும் 32 வயதான Spaniard ஆகியோர் இவ்வாறு யால தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளனர்.

“இதன் போது ஆண் யானை ஒன்று தம்மை பின்தொடர்ந்ததனை நாம் அவதானித்தோம். நான் அது ஆபத்தாகிவிடும் என எண்ணினேன். திடீரென யானை தனது தலையை வாகனத்திற்குள் நுழைந்து உணவு தேட ஆரம்பித்துவிட்டது.

பின்னர் எனது நண்பியை நோக்கி யானையின் தும்பிக்கை வரவும் அவர் சாரதியின் மடியில் ஏரி அமர்ந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து வண்டியில் இருந்த அனைத்து உணவுகளையும் முழுமையாக சாப்பிட்டு விட்டு யானை அங்கிருந்து சென்றுள்ளது” என Bianca குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் பிரித்தானிய பயணிகளில் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.