இலங்கை வரலாற்றில் 122 குகைகள் கண்டுபிடிப்பு – தொடரும் ஆய்வு

அம்பாறை – ரஜகலதென்ன தொல்பொருள் வளாகத்தில் தொல்பொருள் மதிப்பு வாய்ந்த 122 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

983 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த குகைகள் அமைந்துள்ளதாக எமது செய்தி சேவை தெடர்பு கொண்டு வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குகைகள் தொடர்பான விசேட அம்சங்களை விவரித்த பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாரச்சி, குறித்த குகைகளில் சிறப்புமிக்க சுகாதார அமைப்புக்களும் காணப்பட்டதாக தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் இதுபோன்ற குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதலாவது தடவை என அவர் மேலும் குறிப்பிட்டார்.