இவர்களை கண்டால் உடனடியாக அறிவிக்க உத்தரவு…!

மொனராகலை – செவனகல பிரதேசத்தில் மர்மமாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமியினை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை பொது மக்களின் உதவியினை நாடியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறுமி 33 வயதான நபருடன் சென்றுள்ளதாக அவரது தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறை குறித்த இருவரையும் கண்டறிவதற்காக பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

சந்தேக நபர் செவனகல – ஹபுருகல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதோடு, சிறுமி செவனகல – பெதுகம்கம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பான தகவல் அறிந்தால் கீழ உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

செவனகல காவல்துறை – 047-2231322

செவனகல காவல்துறை பொறுப்பதிகாரி – 047-2231321