உங்கள் வருமானத்துக்கு புதிய வரி எவ்வளவு தெரியுமா..?

இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறும் ஊழியர்களிடம் இருந்து வருமான வரியாக 4,000 ரூபா அறவிடப்பட உள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஊழியர்களின் சம்பளத்துக்கான வருமான வரி அறவிடப்படும் முறையிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் மாதம் ஒரு இலட்சத்துக்கும் குறைவாக வருமானம் பெறும் ஊழியர்களிடம் இருந்து வருமான வரி அறவிடப்படமாட்டாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் மாத வருமானத்திற்கு அறவிடப்படும் வரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாத வருமானம் வரி வீதம்
100,000 வரி இல்லை
100,000 – 150,000 4%
150,000 – 200,000 8%
200,000 – 250,000 12%
250,000 – 300,000 16%
300,000 – 350,000 20%
350,000 க்கு மேல் 24%