உயிரைக் காவுகொண்ட கோர விபத்து: பலர் படுகாயம்..!

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை வேன் ஒன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் வேனில் பயணித்த 4 பேரும், பாரவூர்தியில் பயணித்த 4 பேரும் காயமடைந்து களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 28 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.