உலக முடிவு பிரதேசத்தில் நடப்பது என்ன..? வெளிவரும் புதிய தகவல்!

ஹோர்டன் சமவெளியில் அமைந்துள்ள உலக முடிவு பிரதேசத்திற்கு கீழ் பகுதியில் இனங்காணப்பட்ட ஆபத்தான இரண்டு பகுதிகளுக்கு பாதுகாப்பு வலைகளை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினத்தில் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் உலக முடிவு பிரதேசத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உலக முடிவு பிரதேசத்தை பார்வையிட வரும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவி்ககப்படுகிறது.

மத்திய மாகாண வனவிலங்கு பணிப்பாளருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவின் பொறுப்பாளர் பிரதீப் குமார தெரிவித்தார்.

உலக முடிவு பிரதேசத்தை பார்வையிட வருடாந்தரம் சுமார் 5 இலட்சம் உள்நாட்டு , வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்காக பிரவேச சீட்டு வழங்கப்படும் போது, பாதுகாப்பு குறித்து தௌிவுபடுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.