ஐஸ் மழையில் நனையும்..!

தலவாக்கலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை பெய்த மழையுடன் இவ்வாறு ஐஸ் கட்டிகள் விழுந்துள்ளன.

இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் மழை பெய்துள்ளது. இதன்போது இடைக்கிடை ஐஸ் கட்டிகள் விழுந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலங்களின் பின்னர் தலவாக்கலையில் ஐஸ் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.