ஐ.தே.க.விற்கு திடீர் குழப்பம் – ஆரம்பமானது அதிகார மோகம்!

பொதுத் ​தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுமாறு முன்னாள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இல்லை என்றால் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வது சிரமம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை , ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.