ஒரே இரவில் மஹிந்த – மைத்திரி – சம்பந்தர் சந்திப்பு!

ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் சிறப்பு நிகழ்ச்சி கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இந்த நத்தார் நிகழ்ச்சியில் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எவ்வாறாயினும் இந்த நத்தார் நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.