கர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுக் கொடுக்குமாறு குடும்ப சுகாதாரப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

கர்ப்பிணி தாய்மார் மற்றும் அண்மையில் குழந்தை பிரசவித்த தாய்மாருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுக் கொடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டால் முதல் நாளிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தனியார் மருத்துவர்கள், வெளிநோயாளர் பிரிவினர் மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

டெங்கு மற்றும் இன்புளுன்சா நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கு ஏனையவர்களை விடவும் அதிகளவு ஆபத்து நிலைமை காணப்படுவதாக இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்புளுன்சா நியூமோனியா தாக்கத்தினால் இந்த ஆண்டில் ஓர் கர்ப்பிணித் தாய் மரணித்துள்ளார்.

கடந்த ஆண்டு இவ்வாறான தாக்கங்களினால் நாற்பது கர்ப்பிணித் தாய்மார் உயிரிழந்திருந்தனர்.

காய்ச்சல் ஏற்படும் தாய்மாரை உடனடியாக மருத்துவ மனையில் சேர்ப்பதன் மூலம் தாய்மாருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.