கல்முனை ஆட்சியில் கணேசனும் இணைவு!

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

41 ஆசனங்கள் உள்ள கல்முனை மாநகர சபையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதி மேயர் பதவியினைப் பெற்றுள்ளது.

மேயர் பதவிக்கு போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்கியமையினால், பிரதி மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் என்பவருக்கு மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதி மேயர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்ட உறுப்பினருக்கே மு.கா. உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த காத்தமுத்து கணேஷ் என்பவருக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது