கல்வியில் பிந்தங்கிய நிலையில் மட்டக்களப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் இன்னும் பின்தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மீண்டும் மீண்டும் கல்விக்கு கூடுதலான பங்களிப்புக்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கல்வித்துறையில் 9 வது இடத்தில்தான் உள்ளதும் ஒது துரதிஸ்ட்டம் காணப்படுகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் 24 வது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் நாம் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சுவாமி விவேகானந்தரின் 156 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.