குண்டுவெடிப்புக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட தேவாலயங்கள்

குண்டுவெடிப்புக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட தேவாலயங்கள் 1ஈஸ்டர் தின குண்டுவெடிப்பினால் மூடப்பட்டிருந்த தேவால யங்களில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகள் நடைபெற்றன. கடந்த மாதம் 21ம் தேதி  தேவாலயங்கள், நட்சத்திர உணவு விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன.

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.

இதனால் பதற்றமான சூழல் நிலவி வந்ததால், தேவாலயங்களில் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டு, மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து, மீண்டும் தேவாலயங்கள் திறக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதையொட்டி தேவாலயங்களை சுற்றிலும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் தேவாலயங்களுக்குள் அனுப்பப்பட்டனர்.