கேட்பார் அற்று கொழும்பில் நடக்கும் அட்டகாசம்..!

கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் உள்ள வீதிகளில் கோடிஸ்வர வர்த்தகர்களின் பிள்ளைகள் இரவு நேரத்தில் நடத்தும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயங்கள் காரணமாக பொலிஸார் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.

பந்தயங்களுக்கு பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் 10 முதல் 15 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை எனவும் அவை சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறான 10 மோட்டார் சைக்கிள்களையும் 80 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக இரவு நேரங்களில் நடத்தப்படும் பந்தயங்களின் போது வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸ் வாகனங்களையும் முந்திச் செல்லும் சந்தர்ப்பங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.