கொழும்பிலும் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் நீர் இல்லை!

எதிர்வரும் சனிக்கிழமை காலை எட்டுமணி முதல் கொழும்பின் பல பகுதிகள் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்தியாவசிய சீரமைப்புப் பணியின் காரணமாக இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை- கல்கிசை, கோட்டை மற்றும் கடுவலை மாநகர பகுதிகளுக்கும், மஹரகமை, பொரலெஸ்கமுவை மற்றும் கொலன்னாவை பகுதிகளுக்கும் நீர்விநியோகம் தடைப்படுகின்றது.

அத்துடன், கொட்டிகாவத்தை – முல்லேரியா, ரத்மலானை, மற்றும் சொய்சாபுர பிரதேசங்களிலும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.