கொழும்பில் அதிசயிக்கதக்க கிணறு..!

கொழும்பில் அதிசயிக்கதக்க வகையில் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் இந்த கிணறு அமைந்துள்ளது.

எனினும் இந்தக் கிணறு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள மாளிகை ஒன்றில் இந்தக் கிணறு அமைந்துள்ளது.

இந்த கிணற்றில் காணப்படும் நீர் என்றும் வற்றாத நிலையில் காணப்படுகிறது.

வறட்சியான காலநிலையிலும் வற்றிப் போதமையினால் அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிசயதக்க வகையில் அமைந்துள்ள இந்த கிணறு அந்தப்பகுதி மக்களுக்கு இயற்கை கொடுத்த வரமாக கருதப்படுகிறது.

எனினும் இந்த கிணற்றினை மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியின் ஊடாக பாரிய வீதியை ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.