கோர விபத்து 16 பேர் படுகாயம்..!

ஹபரண, மொரகஸ்வேவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்தவர்களுள் 8 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த அனைவரும் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் நித்திரையின் காரணமாகவே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.