கோறளைப்பற்று அதிரடி சோதனை சிக்கிய பல செயல்கள்…!

வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 83 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நஜீப்ஹான் தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவிலுள்ள செம்மண்ணோடை பிரதேசத்தில் 34 டெங்கு நோயாளர்களும், பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் 28 டெங்கு நோயாளர்களும் இணங்காணப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பிரதேசங்களுமே அதிக டெங்கு நுளம்புகள் காணப்படும் பிரதேசமாக இணங்காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவினால் டெங்கு பரிசோதனை வேலைத் திட்டத்திம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் செம்மண்ணோடை பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு பரிசோதனை இடம்பெற்ற போது 25 வீடுகளில் டெங்கு நுளம்புகள் பெருக்கத்திற்கா அபாயம் காணப்பட்டதுடன், 15 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பத்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.