சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது..!

ரத்மலானை பிரதேசத்தில்  கல்கிச்சை பொலிஸ் பிரிவினரால் 2.27 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரத்மலானை , வெடிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய  நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை கல்கிச்சை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்நிலையில், கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.