சரவணா வசம் மட்டக்களப்பு மாநகர சபை!

மட்டக்களப்பு மாநகர சபையின் 14 வது நகர முதல்வராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தி.சரவணபவன் தெரிவானார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு முதல்வர் மற்றும் உதவி முதல்வரை தெரிவு செய்யும் சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது, மாநகர முதல்வராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தி.சரவணபவான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நகர முதல்வர் தெரிவுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக தி.சரவணபவன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எஸ்.சோமசுந்தரம் ஆகியோரின் பெயர்களும் பிரேரிக்கப்பட்டன.

இதில் சரவணபவனுக்கு ஆதரவாக 25 வாக்குகளும், சோமசுந்தரத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

2 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

பிரதி முதல்வராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் க.சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் நகரசபை தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவு இன்று நடைபெற்றது.

அதன் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ரம்ழான் அப்துல் வாசித் அலியும், உப தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட மீராலெப்பை ரெபுபாசும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வாசித் அலிக்கு ஆதரவு தெரிவித்தனர்.