ஞானசார தேரர் மீண்டும் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் காணப்படும் புர்கா, நிகாப் என்பவற்றையும் இஸ்லாமிய அறநெறிப்பாடசாலைகளையும் தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று பொதுபல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை எமது நாடு என்ற உண்மையை விளங்கி தைரியமாக கூறுவதற்கு நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு இல்லையெனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப நாட்டை அராஜகநிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் ,எனினும் தாம் இதனை நிறைவுக்கு கொண்டு வருவோம் எனவும் ஞானசார தேரர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.