தமிழர்களுக்கு தனி பாராளுமன்றம் உருவாகும் – அந்த முன்னாள் அமைச்சரின் ஆசை!

யுத்தம் முடிந்த பின்னும் யுத்தத்திற்கான காரணம் முடியவில்லை என்பதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம்.

யுத்தத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக நாம் ஆரம்பித்த பயணம் தற்போது எங்கே சென்றுள்ளது என மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றுக்குள் இன்று நடந்தது அசிங்கமான காட்சி. சிங்கள கட்சிகளாலேயே ஒற்றுமையாக இருக்க முடியாதென்றால் நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

இதை பார்க்கும் போது எமக்கு தனியாக ஒரு நாடாளுமன்றம் வேண்டும் என்ற எண்ணத்தை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல டயஸ் போராக்கள் மத்தியிலும் உருவாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

தற்போது நாடாளுமன்றத்திற்குள்ளேயே அரச பயங்கரவாதம் உருவாகி உள்ளது. அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவே வடகிழக்கு தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

தற்போதும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் மஹிந்தவும் மைத்திரியுமே பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.