திருகோணமலை விபத்தில் ஒருவர் பலி!

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 05ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து வானொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதால் இன்று காலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த சமீர (30வயது) என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வானின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.