திருமலை அம்பாளுக்கு தீர்த்தோற்சவம்!

திருகோணமலை – அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவ திருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை திருக்கோணமலை உயர்ந்தப்பாடு சமுத்திரக் கரையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் அருளை பெற்று கொண்டுள்ளனர்.