நாடாளுமன்றில் ஜனாதிபதியை சாடினார் அநுர!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலுவிழந்துள்ளமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறப்புக்கூற வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்கியமைக்கான காரணத்தை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது, அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்துவதில்லை“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.