நாட்டில் நீதிதுறைக்கும் ஜனநாயகத்திற்கும் யாரும் சவால் விட முடியாது: வே.இராதாகிருஸ்ணன்

ஒரு மனிதனுக்கு எதிராக யாராவது ஒருவன் தப்பு செய்தால் பாதிப்புக்கு உள்ளானவன் தனது பிரச்சினையை முதலில் கடவுளிடமும் பின் நீதிதுறையுடனுமே செல்லான். அதற்கு கடவுளின் தீர்ப்பு சற்று தாமதமானாலும் நாம் நீதிமன்றத்தின் திர்ப்பையே உடனடியாக எதிர்பார்ப்போம்.

அந்த வகையில் இலங்கையில் நீதிதுறை கடந்த 50 நாட்களாக நடந்த அரசியல் யுத்ததிற்கு ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்து இந்த நாட்டில் நீதிதுறைக்கும் ஜனநாயகத்திற்கும் யாரும் சவால் விட முடியாது என்ற நிலையை உருவாகி இருகின்றது. என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கூறுகின்றார்.

நுவரெலியா “சையில்டஸ்” நிறுவனத்தின் ரைன்போ சித்திர போட்டியில் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசளிக்கும் விழா அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஜி.விஜயகுமார் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் 15.12.2018 நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்தக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கபட்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி இந்த தீர்ப்பினை நீதிதுறை வழங்கியதற்கு அமைய இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கபட்டுள்ளது. 50 நாட்களாக இந்த நாட்டில் மக்கள் துன்பங்களை அனுபவித்தனர்.

இச்சந்தர்பத்தில் அவருக்கு எனது சார்பிலும் நுவரெலியா மக்கள் சார்பிலும் எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கு எதிர்காலம் சுபீட்சமாக இரக்க வேண்டும் இவர் ஊடாக நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கபட வேண்டும் என்று கூறினார்.