நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையின் காலநிலையில் மாற்றம்!

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையின் பின்னர் நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாட்என் அதிகமான பிரதேசங்களில் வெப்பமான காலைநிலை தொடர்ந்தும் நிலவும் எனவும் அந்நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக களுத்துறை, இரத்தினபுரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் இன்று வெள்ளி பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலையில் பனிமூட்டத்துடன் கூடிய காலைநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.