பஸ் சில்லில் சிக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நடந்த விபரீதம்!

கொழும்பு – மாத்தறை பிரதான வீதியின் ஹிக்கடுவை பிரதேசப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த காவற்துறை அதிகாரி , பஸ்ஸில் இருந்து இறங்க முற்பட்ட போது அதன் சில்லில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

56 வயதுடைய ஹிக்கடுவை – தொரணகல தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.