பாடசாலை மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு – கோடி நம்பிக்கை!

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையானது மழை காலங்களிலும் மழை முடிந்து பின்னரும் வெள்ளம் காரணமாக பாடசாலை வளாகம் நீர் நிறைந்து காணப்படுகின்றன.

இதன்காரணமாக மாணவர்கள், அசிரியர்கள் ஆகியோர் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர் கொண்டு வரும் நிலையில் பாடசாலையில் மழை நீர் தேங்கும் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு ஒன்றினை பெற்றுத் தருவதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உறுதி அளித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அன்னை சாரதா கலவன் பாடசாலையில் வலயக் கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற பாடசாலை புதிய இரண்டு மாடி கட்டத்த் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி உறுதி மொழியினை நேற்று வெள்ளிக்கிழமை (01) வழங்கியுள்ளார்.

நிகழ்வில் வரவேற்பு உரையினை நடாத்திய போது பாடசாலை அதிபர் பெருமால்பிள்ளை தனிகாசலம் அவர்கள் பாடசாலையில் குறைபாடுகள் தொடர்பாக முன்வைதிருந்தார்.

இந்நிலையில் அவரின் கோரிக்கைக்கு தீர்வினை வழங்கும் நோக்கில் உடனடியாக அதிபரின் கோரிக்கைக்கு தீர்வு பெற்று தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்திருந்தார்.

அந்தவகையில் பாடசாலைக்கான வீதியினை அமைப்பதற்காக 20இலட்சமும், பாடசாலை வளாகத்தில் உள்ள நீர் நிலைகளை மண்ணிட்டு நிரப்பவதற்காக 20இலட்சம் ரூபா நிதியும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனால் ஓதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்ததுடன் எதிர்வரும் வாரம் வீதி புணரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்திருந்தார்.