பாதாள உலகக் குழுவுக்கு எதிரான பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு..!

பாதாள உலகக் குழு செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் உயர் பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

பாதாள உலகக்குழு செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முனைப்புக்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முனைப்புக்களை முடுக்கி விட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லதீப் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஆகியோரின் தலையீட்டின் அடிப்படையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லதீப்பை இடமாற்றம் செய்ய முயற்சிக்கப்படுவதாக வார இறுதி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லதீப்பிற்கு பதிலாக பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவிற்குப் பொறுப்பான உயர் அதிகாரி ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.