பாதீடு 2019 – வாகன விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதோ

இம்முறை வரவு செலவு திட்ட யோசனையில் 800 சிசி சிலிண்டர் திறன் கொண்ட குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க இம்முறை பாதீட்டில் யோசதனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , 1000 சிசி சிலிண்டர் திறன் கொண்ட குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாலும் மற்றும் 1300 சிசி சிலிண்டர் திறன் கொண்ட குறைந்த பெற்றோல் வாகனத்திற்கான உற்பத்தி வரி 5 இலட்சம் ரூபாவினாலும் அதிகரிக்க இம்முறை பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 800 சிசிக்கும் குறைந்த சிலிண்டர் திறன் கொண்ட கலப்பின பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 1500 சிசிக்கும் குறைந்த சிலிண்டர் திறன் கொண்ட கலப்பின பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 5 இலட்சம்  ரூபா வரை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , முச்சக்கரவண்டிகளுக்கான உற்பத்தி வரியினை 60 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க இம்முறை பாதீட்டில் யோசதனை முன்வைக்கப்பட்டுள்ளது.