பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் மட்டக்களப்பு

ஜ.நா.சபைக்கு நான்கு அம்சக்கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள 08 மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினரகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்பாட்டப் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வாக்கிரிஷா வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி மேற்படி அழைப்பை விடுத்துள்ளார்.

ஜ.நா.சபையின் 40வது கூட்டத் தொடர் இடம்பெறும் இத்தருணத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், ஜ.நாடுகள்.சபையிடம் இலங்கை அரசுக்கு காலவகாசம் இனியும் வழங்ககூடாது, சர்வதேச விசாரணைகள் ஒன்று தமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவையில்லை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தேவையில்லை என்ற நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து இப் பாரரிய போராட்டம் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.