பிள்ளையை தந்தை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்!

மாத்தறை தெனியாய விஹாரஹேன கொஸ்கொல தோட்டத்தில் 28 வயதுடைய தந்தை ஒருவர் தனது 10 வயதுடைய பெண் பிள்ளையை பெற்றோல் ஊற்றி எறித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவர் தனது மணைவியுடனும் 10 வயதுடைய பெண் பிள்ளையோடும் கொஸ்கொல தோட்டத்தில் வசித்து வந்துள்ளார்.

மணைவியோடு சண்டை பிடித்துக்கொண்டு தனது 10 வயது குழந்தையை மறைவான இடத்துக்கு அழைத்துச்சென்று தலையில் பெற்றோளை ஊற்றி பற்ற வைக்க முயற்சித்துள்ளார்.

இதனை அறிந்த சம்மந்தப்பட்டவரின் மணைவி ஊராரின் ஒத்துழைப்போடு சம்பவத்தை தடுத்து பின்னர் தெனியாய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்ன சம்மந்தப்பட்ட நபரை தெனியாய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.