மட்டக்களப்பில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் தீயில் நாசம்!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் இருந்த வாகனம் திருத்தும் நிலையத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன நிலையம் தீப்பிடித்தது தொடர்பில் உரிமையாளருக்கு அயலில் இருந்தவர்களினால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு திருத்தவேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விலையுயர்ந்த கார்களும் முற்றாக எரிந்துள்ளதாகவும் இதன்போது ஒரு கார் சேதமடைந்துள்ளதாகவும் வாகன நிலையத்தில் இருந்த பொருட்களும் எரிந்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.