மஹிந்தவையும் சந்திரிக்காவையும் சந்திக்கும் சிலர்..!

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதிகள் இருவரை சந்திக்க உள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மே மாதம் 8ஆம் திகதியின் பின்னர், தமது கொள்கைப் பிரகடனத்தை அவர்களிடம் சமர்ப்பித்து சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.