முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மகிந்த முக்கிய பேச்சு – இணைந்து பணியாற்ற சம்மதம்

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான முகநூல் நிறுவனத்தின் பொதுகொள்கை பணிப்பாளர் அன்கி தாஸ் மற்றும் அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டது.

இணையப் பாதுகாப்பு, பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்தை வாய்ப்பு, அதிகரித்து வரும் போலிச் செய்திகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முகநூல் அதிகாரிகள் குழுவுடன் தாம் தொடர்ந்தும் நெருங்கி பணியாற்றவுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.