முச்சக்கரவண்டி பாய்ந்ததில் வந்த சேதம்..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவில பகுதியில் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கவரவில தோட்டத்திலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டி, இன்று அதிகாலை கவரலில தோட்டப்பாதையில் பயணித்துகொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுக்குள்ளானதாகவும், அதிக முகில் கூட்டம் நிறைந்த காலநிலை காணப்படமையே விபத்துக்கு காரணம் என்றும் மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.