யால பூங்காவில் நடந்த சம்பவம் சரவதேசத்தையே திரும்பிப் பார்க்கசெய்துள்ளது..!

யால தேசிய பூங்காவில் யானை ஒன்று செயற்பட்ட முறை தொடர்பான புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன.

யால தேசிய பூங்காவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குடும்பத்தினரின் வாகனத்தை இடைமறித்த யானை அதில் உணவு தேடியுள்ளது.

உணவு கிடைக்காமையினால் கோபமடைந்த யானை ஒன்று, சுற்றுலா பயணித்த ஜுப் வண்டியை தாக்க முயன்றுள்ளது.

எனினும் சாரதி தனது இருக்கையை விட்டு சற்று தூரம் தள்ளி சென்றுள்ளார். இதனால் யானை வித்தியசமாக கூச்சலிட ஆரம்பித்துள்ளது.

சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டவர்கள் அச்சத்தில் சத்தமிட ஆரம்பித்தவுடன் சாரதி ஒருவாறு வேகமாக வாகனத்தை ஒட்டி தப்பிச் சென்றுள்ளனர். எனினும் யானை அந்த ஜுப் வண்டியை துரத்தி சென்ற போதிலும் அதற்கு அதனை பிடிக்க முடியவில்லை என கூறப்படுகின்றது.

வனவிலங்கு புகைப்பட கலைஞர் Sergey Savvi தனது மனைவியுடன் யால தேசிய பூங்காவிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.