யாழில் பாரிய கஜா சூறாவளி சேத விபரம் வெளியானது…!

கஜா சூறாவளியினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 வீடுகள் முழுமையாகவும் 483 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

குறித்த சூறாவளி தாக்கம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 இதேவேளை, மக்கள் மத்தியில் ஆழிப்பேரலை அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான எந்த அடிப்படையும் இல்லையெனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.