வவுனியாவில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

வவுனியா ஓமந்தையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிஸார்.

நேற்று மாலை ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவரை வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது அவரிடமிருந்து 45 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாகவும் 55 வயதான நபரை கைது செய்துள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தமது கட்டுபாட்டில் எடுத்து சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் கைது செய்யபட்ட நபர் நாளைய தினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.