ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச ஆகியோர் பங்கேற்கவுள்னர்.

அதேநேரம், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் கலாநிதி ஜகத் வெல்லவத்த ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.