ஹெரோயினுடன் யுவதியொருவர் கொழும்பில் சிக்கினார்…!

களனி – பேதியாகொட பிரதேசத்தில் 30.200 கிராம் ஹெரோயினுடன் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யுவதி 23 வயதான பேதியாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.