50 வயதுடையவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பு: இறுதியில் நடந்தது…!

கொட்டகலை – திம்புள பத்தனை யதன்சைட் தோட்டத்தில் நபரொருவர் மேற்கொண்ட தாக்குதலில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண் வெட்டியால் தாக்கி நேற்று இரவு இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் வசிக்கும் 36 வயதுடைய சமந்த(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மனைவியுடன் அப்பகுதியில் வசிக்கும்50 வயதுடைய சாரங்க (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தகாத உறவினை பேணி வந்துள்ளார்.

இந்நிலையில் சமந்த என்பவர் பயணம் ஒன்றினை மேற்கொண்டு வீடு திரும்பும் போது மனைவி வீட்டில் வசித்திருக்கவில்லை.

இந்நிலையில் சந்தேகம் கொண்டு தேடி பார்க்கையில் சாரங்க என்பவருடம் மரக்கறி பயிரிடப்படும் பகுதியில் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பதனை அவதானித்துள்ளார்.

கோபம் கொண்ட கணவர் மண்வெட்டிக்கு பொருத்தப்படும் கைப்பிடியால் 50 வயதுடைய குறித்த நபரை முழுமையான பலம் கொண்டு தாக்கியுள்ளார்.

பலத்த தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கொலை செய்தவர் காவல் நிலையம் சென்று தனது குற்றத்தினையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மனைவியுடன் காணப்பட்ட தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதென காவல் நிலைய அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தனது மனைவியையும் தாக்கியுள்ள நிலையில், அவர் கொட்டக்கலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தமிழர்கள் என்பதோடு அவர்களின் பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது)
hiru